ALL VIDEO ஆன்மீகம் NEWS
சினிமா செய்திகள்
June 28, 2020 • Dharmalingam


கொரோனா வைரஸ் வெடித்ததால் சூரியாவின் வரவிருக்கும்
'சூரரை போற்று வெளியீடு பாதிக்கப்பட்டது.
சூரியாவின் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில்
சிறப்பாக செயல்படுகின்றன, மேலும் அர்ப்பணிப்புள்ள நடிகருக்கு
மொழிகளில் பெரும் ரசிகர்கள் உள்ளனர்.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை கதையை
அடிப்படையாகக் கொண்டு சுதா கொங்கரா இயக்கியுள்ள
சூரரை போற்று'.

உற்சாகமான தொழிலதிபராக மாறும் பைலட் வேடத்தில்
சூரியா நடிக்கிறார். இப்போது, ​​சமீபத்திய சலசலப்பு என்னவென்றால்,
சூரியாவின் பைலட் அவதாரம் 'சூரரை போற்று'வின் மறுஉருவாக்கப்பட்ட
இந்தி பதிப்பில் மீண்டும் உருவாக்கப்படலாம்.
சமீபத்தில் தணிக்கை குழுவிலிருந்து 'யு' சான்றிதழைப் பெற்றது, 
மேலும் இதில் அபர்ணா பாலமுராலி, பரேஷ் ராவல், ஜாக்கி ஷிராஃப்
மற்றும் மோகன் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
குனீத் மோங்காவின் சீக்கியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன்
இணைந்து சூரியாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை
தயாரிக்கிறது

நடிகை வனிதா விஜயகுமாரின் 3வது திருமணம் எளிமையாக வீட்டில் நடந்து முடிந்தது. 

நடிகர் விஜயக்குமாரின் மகளும் நடிகையுமான வனிதா, விஜய் நடிப்பில் கதாநாயகனாக நடித்த‘சந்திரலேகா’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

ஒரு சில படங்களில் நடித்த அவர், அதன்பின்னர், திரையில் அவ்வளவாக தோன்றவில்லை. இச்சூழலில் கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ரீ எண்ட்ரீ கொடுத்தார் வனிதா. 

இந்நிலையில், இயக்குனர் பீட்டர் பாலுடன் வனிதா 3வது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார்.

அதன்படி அவர்களது திருமணம் இன்று எளிமையாக வீட்டிலேயே நடந்து முடிந்தது. பீட்டர் பாலை கிறிஸ்துவ முறைப்படி வனிதா கரம்பிடித்தார். இதனையடுத்து திரையுலகினர் பலரும் நடிகை வனிதாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது, தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க காவலர்கள், சுகாதாரப்பணியாளர்கள் என பலர் இரவும் பகலுமாக பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் சிவப்பு மண்டல பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கார்த்திக் நாராயணன், சிகப்பு மண்டலங்களில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசிகளை தெளிக்க நடிகர்அஜித்தின் தக்‌ஷா குழு  சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், திருநெல்வேலி மாவட்டத்திலும் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அஜித் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும், சென்னையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நிறைய பங்காற்றி இருப்பதாகவும் மருத்துவர் கார்த்திக் நாராயணன் தெரிவித்துள்ளார்