ALL VIDEO ஆன்மீகம் NEWS
சினிமா செய்திகள் திருமணத்திற்கு ராணா ரெடி
August 8, 2020 • Dharmalingam

'பாகுபலி' படங்களின் மூலம் இந்திய அளவில் பல சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர் ராணா டகுபட்டி.

தெலுங்குத் திரையுலகின் அந்தக் கால பிரபல தயாரிப்பாளரான ராமா நாயுடுவின் மகன் வயிற்றுப் பேரன் ராணா டகுபட்டி.

இவரின் சித்தப்பா வெங்கடேஷ் தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோ. இவரின் அத்தை மகன்தான் நாக சைதன்யா.

தெலுங்குத் திரையுலகில் பல கோடி சொத்துகளுக்கு அதிபதி ராமா நாயுடுவின் குடும்பம்.

ராணா பற்றி திரையுலகில் அவ்வப்போது காதல் கிசுகிசுக்கள் வருவது வழக்கம். சில நடிகைகளுடன் இணைத்தும் பேசப்பட்டவர்.

திடீரென மே மாதம் தனக்கும் மிஹிகா பஜாஜ் என்பவருக்கும் காதல் என அறிவித்தார். உடனடியாக இருவரது குடும்பத்தினரும் திருமண வேலைகளை ஆரம்பித்தனர்.

ஆக.8 ஐதராபாத்தில் உள்ள ராணா குடும்பத்தினரின் ராமா நாயுடு ஸ்டுடியோஸில் தெலுங்கு முறைப்படி இரவு 8.30 மணிக்கு ராணாவுக்கும், மிஹிகாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

திருமணத்திற்கு தயார் என்பதைக் குறிக்கும் வகையில் தனது அப்பா சுரேஷ் பாபு, சித்தப்பா வெங்கடேஷ் ஆகியோருடன் இணைந்திருக்கும் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு 'ரெடி' எனக் குறிப்பிட்டுள்ளார் ராணா.