ALL ஆன்மீகம் VIDEO NEWS
சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
July 29, 2020 • Dharmalingam

சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்


ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்கள்: சிரிய ஏலக்காய் எலெட்டாரியா (Elettaria), பெரிய ஏலக்காய் அமோமம் (Amomum).

இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந்த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய்கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனால் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ளவை.

இத்தகை ஏலக்காய், இந்தியா துணைக் கண்டத்தில் உணவில் வாசனைக்காக பயன்படுத்தப் படுகிறது. 

உடல் நலத்தை மேம்படுத்தும் மூலிகைகள் பலவற்றின் பூர்வீகமாக இந்தியா இருக்கிறது.

அதிலும் இன்று வரை யாரும் அறிந்திராத பல அற்புதமான மூலிகைகள் விளையும் பகுதியாக மேற்கு தொடர்ச்சி மலைகள் உள்ளன.

அப்படி மேற்கு தொடர்ச்சி மலையில் வளர்ந்த ஒரு மூலிகை காய்தான் “ஏலக்காய்“. பொதுவாக ஏலக்காயை அனைவரும் வாசனை பொருளாகத்தான் பார்க்கிறார்கள்.

அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். ஒரு சிலர் ஏலக்காயை விரும்பமாட்டார்கள். ஆனால் அதனின் மகத்துவத்தை புரிந்து கொண்டால் அதை விரும்பாமல் இருக்கமாட்டார்கள்.

ஏலக்காயின் பயன்கள்

  • உணவு மற்றும் நீர்ம பொருள்களின் அகில்களாக (நறுமணப் பொருளாக)
  • சமையலின் நறுமணமாக
  • ஏலக்காய் எண்ணெய் பதப்டுத்தப்பட்ட உணவு, நீர்ம, மற்றும் வாசனை பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
  • தமிழர்கள் உருவாக்கும் தேநீர்களில் ஒரு மணம் சேர்ப்பதற்கு
  • வட இரோப்பாவில் இனியங்களில் ஒரு இன்றியமையாத உள் பொருளாக

மருத்துவ குணங்கள்

1. மருத்துவத்தில் பல் மற்றும் அதனை சார்ந்த நோய்களுக்கு மருந்தாக

2. செரிமானத்தை தூண்டுவதாக, 3. குரல் வளை மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு

4. மலட்டு தன்மை மற்றும் அரைகுறை விந்து வெளிபடுதலை தீர்ப்பதற்கு . 

தேநீர் அருந்தும் போது சர்க்கரைக்கு பதிலாக ஏலக்காய்களை தூளாக்கி, தேநீரில் கலந்து அருந்தி வந்தால் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு சரியான விகிதத்தில் இருந்து, சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும்.

ஏலக்காய், சீரகம், சுக்கு, கிராம்பு சம அளவாகப் பொடித்து, 2 கிராம் தேனில் தினமும் 3 வேளைகள் சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.
 
நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும்.
 
சிலர் வாயிலிருந்து நாற்றம் வீசும். அருகில் இருந்து பேசமுடியாதபடி வாய் நாற்றம் அதிகமாக இருக்கும். இவர்களும் ஏலக்காய் மென்று சாப்பிடலாம்.

நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி பாதிப்பு கொண்டவர்கள் தங்கள் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

இனிப்பு சார்ந்த உணவுகளை குறைக்க வேண்டி இருப்பதால், தேநீர் போன்றவற்றை அருந்தும் போது சர்க்கரைக்கு பதிலாக ஏலக்காய்களை தூளாக்கி, தேநீரில் கலந்து அருந்தி வந்தால் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு சரியான விகிதத்தில் இருந்து, சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும்.

ஏலக்காய் நம் உடலில் தங்கி உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. மேலும் ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையும் ஏலக்காய்க்கு உள்ளது.

வாயு தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற அனைத்து பிரச்சினைகளும் நீங்க சிறிதளவு ஏலக்காய்களை சர்க்கரையுடன் சேர்த்து நன்கு பொடியாக்கி, தினமும் காலையில் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சார்ந்த அனைத்து பிரச்சினைகளும் தீரும். வயிற்று உப்புசத்தை நீக்கி செரிமானத்தை எளிதாக்குகின்றது.

அதே  நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை  ஏலக்காய்த் தூளையே பயன்படுத்தினால் போதும்.
 
பாலில் சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து அருந்தி வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் குணமாகும்.

புகை பிடிக்கும் பழக்கம் என்பது தன்னை மட்டும் அல்லது மற்றவருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு மோசமான பழக்கமாகும்.

தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு சிறிது காலத்தில் நுரையீரல், வாய் போன்ற உறுப்புகளில் புற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

புகை பழக்கத்தை நிறுத்திய நபர்கள் பலருக்கும் மீண்டும் மீண்டும் புகை பிடிக்க தூண்டும் உணர்வு ஏற்படும். அச்சமயங்களில் சிறிதளவு ஏலக்காய்களை வாயில் போட்டு மென்று வந்தால் மெல்ல மெல்ல புகை பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.

மற்றும் ஒரு சமையல் குறிப்புடன்

வணக்கம் அன்புடன் கார்த்திகா