ALL ஆன்மீகம் NEWS VIDEO
கோவை தனியார் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கில் - ஏடிஜிபி ரவி
December 21, 2019 • Dharmalingam • NEWS

கோவையில் , தனியார் கல்லூரியில் சைபர் கிரைம் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் ஏடிஜிபி ரவி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நூற்றுக்கணக்கான ஆபாச தளங்கள் புகாரின் பேரில் முடக்கப்பட்டுள்ளன. மற்ற ஆபாச தளங்களையும் முடக்க மொபைல்போன் சேவை நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம். சைபர் குற்றங்கள் அதிகம் நடப்பதால், சைபர் கோர்ட், போலீஸ் ஸ்டேசன்கள் வரும் காலங்களில் அமைக்கப்படும். போக்சோ குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது போல், வரும் காலங்களில் சைபர் கோர்ட்கள் அமைக்கப்படும். கோவை, சென்னை நகரங்கள், நாட்டிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் குறைவாக நடக்கும் நகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.