ALL ஆன்மீகம் VIDEO NEWS
கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம்.முதல்வர் பழனிசாமி பேச்சு
July 29, 2020 • Dharmalingam

தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் வரும் 31-ம் தேதியுடன் (நாளை மறுநாள் )முடிவடைகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை,  தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்து வருகிறார்.

ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு  பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

சென்னையில் மட்டும் 81,530 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் 84.5% பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 24.7 லட்சம் பேருக்கு கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நோய் தொற்று எண்ணிக்கை 2,27,688, சென்னையில் 96,438 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.