ALL VIDEO ஆன்மீகம் NEWS
கொரோனா நோய் தொற்று
July 29, 2020 • Dharmalingam

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சித்தமருத்துவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்த ரவி(51) என்ற சித்த மருத்துவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி சித்த மருத்துவர் உயிரிழந்த நிலையில் விழுப்புரத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையர், சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு

* மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பாக செயல்பட்டதால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி