ALL VIDEO ஆன்மீகம் NEWS
கொரோனா-நோயாளி தூக்கு
June 19, 2020 • Dharmalingam

கொரோனாவால் நேற்று மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்நோய்க்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 625ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 501ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்த 49 பேரில், 40 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

புதுக்கோட்டை  - அறந்தாங்கியை சேர்ந்த 54 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் புதுக்கோட்டை  அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில்  சிகிச்சை பெற்று வந்தார்.  

இதனிடையே அவர் மருத்துவமனை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் விரக்தியால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.