ALL ஆன்மீகம் NEWS VIDEO
கொரோனா தொற்று செய்திகள்
August 5, 2020 • Dharmalingam

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காதர் மொய்தீன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,76,333-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 67 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1604-ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 95,625 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 79,104 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 7,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.03 லட்சத்தை தாண்டியது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,03,360 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 18,691,298 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11,908,712 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 65,437 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.