ALL NEWS ஆன்மீகம் VIDEO
கொரோனா தொற்று செய்திகள்
August 10, 2020 • Dharmalingam

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 114 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,041-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 9 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,814 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த 863 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 701 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 5,40,175-ஆக அதிகரித்துள்ளது.