ALL ஆன்மீகம் VIDEO NEWS
கொரோனா தொற்று சென்னையில் பாதிப்பு தொடர்ந்து குறையுது
August 1, 2020 • Dharmalingam

தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 2.45 லட்சம் பேரில், 1.84 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர்.

தற்போது, 57 ஆயிரத்து, 968 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில், 120 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.

இந்த ஆய்வகங்களில்  மட்டும், 58 ஆயிரத்து, 350 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 5,881 பேருக்கு தொற்று உறுதியானது.

கொரோனா பாதிப்பால் இதுவரை, சென்னையில், 2,113; செங்கல்பட்டில், 248; மதுரையில், 237; திருவள்ளூரில், 239 பேர் என, மாநிலம் முழுதும், 3,935 பேர் இறந்துஉள்ளனர்

டெல்லியில் புதிதாக 1,195 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,35,598-ஆக அதிகரித்து உள்ளது.

டெல்லியில் மேலும் 27 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 3,963-ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.82 லட்சத்தை தாண்டியது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 682,197 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 17,745,626  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11,151,820 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 65,502 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.