ALL ஆன்மீகம் VIDEO NEWS
கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் WHO
July 31, 2020 • Dharmalingam

 

மக்கள் இனி கொரோனாவுடன் தான் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என உலக சுகாதர அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்

உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 72 லட்சத்து , ஆயிரத்து, 277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் பலியாகி உள்ளனர்.

ஒரு கோடியே 7 லட்சத்து 16 ஆயிரத்து 271 பேர் மீண்டுள்ளனர்.

ஜெனிவா நகரில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியது, உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

கொரோனா பாதிப்பால் மனிதனின் வாழ்கை முடிந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.