ALL VIDEO NEWS ஆன்மீகம்
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து
June 14, 2020 • Dharmalingam

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் இணைந்து செயல்பட சமீபத்தில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் - கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் விலங்குகளைக் கொண்டு தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே ரிவர்ஸ் வேக்ஸினாலஜி முறையில் கொரோனாவைத் தடுக்கும் புரதத்தை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரலில் கண்டறிந்தது.

முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த கட்டமாக விலங்குகளின் உடலில் புரதத்தை செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா ஷேஷைய்யன் மற்றும் பேராசிரியர்கள்  அடங்கிய குழுவினர் கண்டுபிடித்த புரதத்துக்கு இதுவரை பெயரிடப்படவில்லை.

விரைவில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து... எம்.ஜி.ஆர். பல்கலை. துணைவேந்தர் சுதா சேஷையன் நம்பிக்கை