ALL NEWS ஆன்மீகம் VIDEO
கேஸ் சிலிண்டர் விலை- உயர்வு
July 1, 2020 • Dharmalingam

 

மதுரை மாவட்டத்தில் இதுவரை 142 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் 3 காவல் ஆய்வாளர்கள் உள்பட 115 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சி.ராஜசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பலர் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.. மேலும் மின்கட்டணம் செலுத்த வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்படவில்லை.

வெளி மாவட்டங்களிலும் மின் கட்டணத்தை செலுத்த ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார் அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், வெளி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்றும் ,மேலும் 75 சதவீதம் பேர் மின் கட்டணம் செலுத்தியதற்கான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

வெளி மாவட்டகளுக்கு மின் கட்டண கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

 

சென்னையில் ஒரே குடுமத்தை சூறையாடிய கொரோனா தொற்றால், பெற்றோர் இருவரும் உயிரிழந்துள்ள நிலையில், மனவளர்ச்சி குன்றிய மகன் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலம் சின்னக்கடை வீதியில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடைகளை அடைத்து சீல் வைக்க சென்ற மாநகராட்சி அதிகாரிகளை எதிர்த்து, வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றானது அதிவேகமாக பரவி வருகிறது.

 

மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து 2-வது மாதமாக உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. ஆனால், இந்த மாதம் மிகவும் குறைவாக ரூ.4 வரை நகரங்களுக்கு ஏற்றார்போல் உயர்த்தப்பட்டுள்ளது

 

 

சாத்தான்குளம் காவல்துறையினரின் செயல் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

சம்பத்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. சாத்தியமா விடவே கூடாது, என்று ஆவேசமாக கூறியுள்ளார்.