ALL ஆன்மீகம் NEWS VIDEO
கேரளா விமான விபத்து
August 8, 2020 • Dharmalingam

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில்  நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளானது.

துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு குழந்தை மற்றும் 2 விமானிகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மற்றும் அருகிலுள்ள பிற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலர் தங்கள் வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதில் பலியானோர் எண்ணிக்கை தற்பொழுது 16 ஆக அதிகரித்துள்ளது தேசிய மீட்டப்புப்படை வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . 

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கேரளா விமான விபத்து குறித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.