ALL VIDEO ஆன்மீகம் NEWS
கேரளா விமான விபத்து மேலும் 74 பயணிகள் டிஸ்சார்ஜ்
August 12, 2020 • Dharmalingam

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 74 பயணிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக  ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 2 ஆக உடைந்தது. இந்த கோர விபத்தில் 2 விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில், இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை கோழிக்கோட்டில்  உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். விமான விபத்தில் காயம் அடைந்த 149 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 23 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என கூறியிருந்த நிலையில், தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 74 பயணிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக  ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.