ALL ஆன்மீகம் NEWS VIDEO
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை
August 10, 2020 • Dharmalingam

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை:

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கோழிக்கோடு: கேரளாவில் சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.

வீடு இடிந்தும், மின்சாரம் தாக்கியும், நிலச்சரிவில் சிக்கியும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. கோழிக்கோட்டில் நிலச்சரிவில் சிக்கி மாயமான ஒரு வயது குழந்தையின் உடலும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் உடலும் மீட்கப்பட்டன. சிலரை காணவில்லை. மீட்பு பணிகளில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

தென் மேற்கு பருவமழை காரணமாக, கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், பாலக்காடு, காசர்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், இங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

மீட்பு பணிகளை மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட 6 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் விஜயன் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார்.

மீட்பு பணிகளை துரிதபடுத்தவும், மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.