ALL ஆன்மீகம் NEWS VIDEO
குறுஞ் செய்திகள்
July 31, 2020 • Dharmalingam

மயிலாப்பூர் பேராசிரியர் சஞ்சீவி தெருவில் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 500 லிட்டர் சமையல் எண்ணெய், 300 டீ தூள் பாக்கெட்கள் எரிந்து நாசமானது. தண்ணீர் அடித்து தீ அணைக்கப்பட்டதால் 8 மூட்டை சர்க்கரை, 4 மூட்டை பருப்பு, 2 மூட்டை உப்பு தண்ணீரில் நனைந்து நாசமானது.

தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதா, வேண்டாமா என்பது குறித்து, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை உயர் அதிகாரிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் வரும் 3ம் தேதி ஆலோசனை நடத்துகின்றனர்.

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தேசிய கல்விக் கொள்கை என்னும் வரைவு அறிக்கையை கடந்த மே 31ம் தேதி மத்திய அரசிடம் ஒப்படைத்தது.