ALL VIDEO ஆன்மீகம் NEWS
குறுஞ் செய்திகள்
July 29, 2020 • Dharmalingam

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும் 12ஆம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் வரும் 31ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவிப்பு:

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் போர் விமானங்கள் தரையிறங்கியது:

நேற்று முன்தினம் பிரான்சில் புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் யு.ஏ.இ. வழியாக ஹரியானா மாநிலம் அம்பாலா விமானத்தளத்தில் இன்று தரையிறங்கியது. ரஃபேல் விமானங்களுக்கு வாட்டர் சல்யூட் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரயில்வே அமைச்சகம் திட்டம்:

அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் 44 புதிய 'வந்தே பாரத்" எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.