ALL ஆன்மீகம் NEWS VIDEO
குறுஞ் செய்திகள் -சசிகலா ஆகஸ்ட் விடுதலை
June 26, 2020 • Dharmalingam

 

வரும் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.  சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 2017 பிப். மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் தண்டனை காலம் வருகிற 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது டிவிட்டரில், ஆக. 14-ம் தேதி சசிகலா விடுதலையாகலாம் எனத் தகவல் தெரிவித்துள்ளார்

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்தனர். 

சாத்தான்குளம் வணிகர்கள் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. வியாபாரிகள், பொதுமக்கள், ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  சாத்தான்குளத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தந்தை-மகன் உடலுக்கு திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

 

திருச்சியில்  முதல்வர் கூட்டத்தில் பங்கேற்க இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காவிரிவடிநில கோட்ட மயிலாடுதுறை பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு கொரோனா உறுதியானது.

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) 1,675 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

மருத்துவக் கருவிகள் வாங்க தமிழகத்துக்கு ரூ.6,600 கோடி நிதி’கொரோனா தடுப்பு மருத்துவக் கருவிகள் வாங்க தமிழகத்துக்கு ரூ.6,600 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது  - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்*ஏப்ரல் மாதத்தில் இருந்து தமிழகத்துக்கு ரூ.6,600 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது

சீன மின்பொருட்களின் மீதான சுங்கவரியை உயர்த்த மத்திய அரசு முடிவு

 நாடு முழுவதும் அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை ரத்து என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ், மெயில், பயணிகள் ரயில் மற்றும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. ஆக. 12-ம் தேதி வரையிலான பயனாத்திற்க்கு முன்பதிவு செய்யப்பட டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் இடி, மின்னலுக்கு இன்று (வியாழக்கிழமை) 83 பேர் பலியாகியிருப்பதாக அந்த மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கோபால்கன்ஜ் மாவட்டத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், பிகாரில் இடி விழுந்ததில் பலியான 83 பேரது குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இடி, மின்னல், மழையால் உயிரிழந்த 83 பேருக்கு பிரதமர் இரங்கல்'

_______________________

கொரிய  தீபகற்பத்தில் அமைதியை ஊக்குவிக்க முயற்சி செய்து வரும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-க்கு பாராட்டு. கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட உயிர்த்தியாகம் செய்த துணிச்சலான இதயங்களுக்கு வணக்கம்- பிரதமர் மோடி

_________________

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனாவில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை-ஜேபி நட்டா குற்றச்சாட்டு

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் 116 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. இதையடுத்து,உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் 50க்கும்  மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் 59 லட்சத்து 67 ஆயிரத்து 759 ரூபாய் ரொக்கமும்,468 கிராம் தங்கமும், 3 ஆயிரத்து 210 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு மற்றும் அரசு வளர்ச்சித் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம், கோவையில் நேற்று, முதல்வர், இ.பி.எஸ்., தலைமையில் நடந்தது. இதன் முடிவில், முதல்வர் அளித்த பேட்டி:நான் சேலம் மாவட்டம் சென்று ஆய்வு செய்தபோது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், 'சேலம் மட்டும் தான் முதல்வர் கண்ணுக்கு தெரிகிறதா, தமிழகம் முழுதும் கண்ணுக்கு தெரியவில்லையா' என்றார்.

''இந்தியாவிலேயே நோயை வைத்து, அரசியல் நடத்தும் ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும் தான்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., குற்றம் சாட்டினார்.