ALL NEWS ஆன்மீகம் VIDEO
குறுஞ் செய்திகள்-பொது முடக்கம் நீட்டிப்பு-முதல்வர்
June 26, 2020 • Dharmalingam

தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் குறைப்பு ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மாதம் சுமார் ரூ.12,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று நிதித்துறை செயலாளர் கூறியுள்ளதாகவும் முதல்வர் கூறியுள்ளார். திருச்சி சிப்காட்டில் 250 ஏக்கரில் ரூ.200 கோடி மதிப்பில் தொழிற்பூங்கா ஏற்படுத்தப்படும் 

 மருத்துவத்துறை சார்ந்த பிரச்சனைக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கான தேவை ஏற்படவில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து மருத்துவக் குழு உடனான ஆலோசனைக்கு பிறகே முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து வரும் திங்களன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடைபெற உள்ளது    அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக ஒரே நாளில் 101 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 24,830 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மதுரையில் இன்று ஒரே நாளில் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் உள்பட 14 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சாத்தான்குளம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜெயராஜின் குடும்பத்திற்கு திமுக சார்பில்  ரூ.25 லட்சம் நிவாரணம் * திமுக தலைவர்  ஸ்டாலின் அறிவிப்பு

* நீதிக்கான போராட்டத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும் என ஸ்டாலின் உறுதி

தமிழகத்தில் காவலர்களுக்கு FACE SHIELD எனப்படும் முழு முகக்கவசம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து  காவல்துறையினரின் மன உளைச்சல் போக்க உரிய கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை.

தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பாக உரிய நீதி வழங்கப்படும். நீதிமன்றத்தை குறைத்து மதிப்பிட்ட வேண்டாம் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உள்ள ஆவணங்கள், மருத்துவ பதிவேடுகள், சிசிடிவி காட்சிகள் அனைத்தும் பத்திரப்படுத்தி வைக்க கோவில்பட்டி நீதித்துறை நடுவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சட்டத்துறை செயலாளர் அடங்கிய குழு ஒன்று உருவாக்கப்பட்டு காவல்துறையினருக்கு உரிய வழிக்காட்டுதல்கள், வழிமுறைகள் பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

வழக்கு விசாரணையை ஜீன் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

 

முகத்தை மூடுவது, முகக்கவசம் பயன்படுத்துவதுதான் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து - பிரதமர் மோடி

உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ பிரமாண பத்திரம் தாக்கல்* ரத்து செய்யப்பட்ட சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கும் திட்டம்  * சி.பி.எஸ்.இ. 10, 12-ஆம் வகுப்பு  தேர்வுகளை எழுதி முடித்தவர்களுக்கு அதனடிப்படையில் மதிப்பெண் * 3 பாடங்களுக்கு மேல் தேர்வு எழுதியவர்களுக்கு, சராசரி கணக்கிடப்பட்டு அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண்

கொரோனா (COVID-19) தொற்றுநோயை சமாளிக்க, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக தமிழகத்திற்கு இதுவரை மத்திய அரசு ரூ.6,600 கோடி வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருக்கும் தமிழக பெண்களுக்கு ரூ.610 கோடி...
கொரோனா (COVID-19) தொற்றுநோயை சமாளிக்க, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக தமிழகத்திற்கு இதுவரை மத்திய அரசு ரூ.6,600 கோடி வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பணி அளிக்க ரூ.50000 கோடியில் திட்டம்...பாஜக-வின் தமிழ்நாடு பிரிவு தொண்டர்களுடன் மெய்நிகர் சந்திப்பில் பங்கேற்ற நிதியமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

இந்த சந்திப்பின் போது அவர், சீன பொருட்கள் பயன்பாட்டை குறைப்பது குறித்தும் வலியுறுத்தினார். இதனை வலியுறுத்தும் விதமாக அவர், "பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக இறக்குமதி செய்வதில் தவறில்லை,  உள்நாட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களுக்கு மாற்றாய் பொருட்கள் இறக்குமதி செய்யும் நிலைமை மாற்றப்பட வேண்டும் என்றும் இந்த சந்திப்பின்போது அவர் கேட்டுக்கொண்டார்.