ALL ஆன்மீகம் NEWS VIDEO
குறுஞ்செய்திகள்
June 21, 2020 • Dharmalingam

 

 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த திமுக முன்னாள் வடசென்னை மாவட்ட செயலாளர் பலராமன் உயிரிழந்தார்

வடசென்னை முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் பலராமன் மறைவையொட்டி, சென்னை கிழக்கு மாவட்டத்தில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு

* சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சேகர்பாபு அறிவிப்பு

***********************

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மதுரையில் உயிரிழந்தார்

***********************

பொதுமுடக்கம் முழுமையாக அமலில் உள்ள நிலையில் மக்கள் ஒத்துழைப்பு தருகின்றனர்

மக்கள் நெருக்கடி உள்ள பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்

- சென்னை பூக்கடை பகுதியில் ஆய்வு செய்த பின் மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பேட்டி

***********************

சீனமொழியில் அச்சிடப்பட்ட ட்ரம் ஒன்று, ரூ.230 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை பொருட்களுடன் மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கியது

***********************

யோகா செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்