ALL ஆன்மீகம் NEWS VIDEO
குறுஞ்செய்திகள்
June 22, 2020 • Dharmalingam

ஊரடங்கு காலத்தில் மின் அளவீட்டு முறை மற்றும் கட்டண நிர்ணயத்தில் எந்த விதி மீறலும் இல்லை

* சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பதில்.

"சென்னை ஆவடியில் இ பாஸ் இல்லாமல் சென்ற மின்வாரிய ஊழியரை தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?"

* "மின்வாரிய பணியாளர் அடையாள அட்டை காண்பித்தும் அவரிடம் காவல் துறையினர் எப்படி இ - பாஸ் கேட்கலாம்?"

இ-பாஸ் கேட்டு மின்ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம் 

* திருவள்ளூர் மாவட்ட எஸ்.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

_______________

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 26ஆம் தேதி திருச்சி செல்கிறார்

* திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்கிறார்   -  * பல்வேறு நலத்திட்ட பணிகளையும்  முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்

______________

சதத்தை நெருங்கும் பெட்ரோல், டீசல் விலை... 16 நாளில் 8 ரூபாய்க்கு மேல் உயர்வு!

________________

உலக பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி 9வது இடத்திற்கு முன்னேறினார்.

_________________

51வது சர்வதேச இந்திய திரைப்பட விழா நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

___________________

"5ம் வகுப்பு வரை ஆன்லைன் வழி கல்வித் திட்டத்தை செயல்படுத்த கூடாது" -  கல்வியாளர் வலியுறுத்தல்

___________________

""சீனாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தல்

_________________

ஓடிசா மாநிலம், பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி

* 12 நாட்கள் நடைபெறும் பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டத்தில் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்ப்பு

________________