ALL ஆன்மீகம் VIDEO NEWS
குறுஞ்செய்திகள் - நடிகை நமீதா
August 1, 2020 • Dharmalingam

சென்னை: மறைந்த முதல்வர் அம்மாவை  பார்த்து தான் அரசியலுக்கு வந்தேன்

ஜெயலலிதா அம்மா மறைவுக்குப் பிறகு இரண்டு வருடம் காத்திருந்தேன். ஆனால், எனக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை - நடிகை நமீதா

___________________

இனி சுஷாந்த் வழக்கு தொடர்பாக எதுவும் பேசப் போவதில்லை, நிச்சயம் நீதி வெல்லும் என்று காதலி ரியா சக்ரபோர்த்தி வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்

 

'சென்னையில் சைபர் பிரிவுகள்  தொடக்கம்'

சைபர் குற்றங்கள் தொடர்பாக சென்னையில் 12 காவல் துணை ஆணையர் அலுவலகங்களில் புகார் அளிக்கலாம்

* சைபர் குற்றம் தொடர்பாக புகார் அளிக்கும் வசதியை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்

 

ஆன்லைன் கல்விக்கு செல்போன் வாங்கித்தர முடியாத விவசாயியின் மகன் தற்கொலை செய்த சம்பவம் வேதனையளிக்கிறது - உதயநிதி ஸ்டாலின்

* பள்ளிக்கல்வித்துறை ஆன்லைன் வகுப்பு சிக்கல்களை நீக்க வேண்டும் - உதயநிதி

 

தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைக்கான தடை ஆக.15 வரை நீட்டிப்பு'

திருச்சி-செங்கல்பட்டு, மதுரை-விழுப்புரம், கோவை-காட்பாடி, அரக்கோணம்-கோவை, கோவை-மயிலாடுதுறை, திருச்சி-நாகர்கோவில் இடையேயான சிறப்பு ரயில்கள் ரத்து

- தெற்கு ரயில்வே