ALL ஆன்மீகம் VIDEO NEWS
குரு பெயர்ச்சி 2020 கணிப்புகள்
July 9, 2020 • Dharmalingam

மகரம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு வக்ரகதியில் வந்த குருபகவான் - யாருக்கு நன்மை

குருபகவான் சுப கிரகம். இதுநாள் வரை மகரம் ராசியில் சனியோடு இணைந்திருந்த குரு பகவான் படிப்படியாக விலகி வக்ரகதியில் சஞ்சரித்து தனுசு ராசிக்கு இன்று ஜூலை 8  முதல் இடப்பெயர்ச்சியடைகிறார்.

தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமரும் குரு செப்டம்பர் 13ஆம் தேதி முதல் நேர்கதியில் சஞ்சரிப்பார். தனுசு ராசியில் குருவின் வக்ர சஞ்சாரத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

நவகிரகங்கள் அனைத்தும் தங்கள் சுற்றுப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை சில நேரங்களில் பின்னோக்கியும் செல்லும். ஜோதிட ரீதியாக கிரகங்கள் பின்னோக்கி செல்லும் காலங்களை வக்ர காலங்கள் என்கிறோம்.

நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள்.

தனுசு ராசியில் இருந்து கடந்த மார்ச் மாதம் அதிசாரமாக மகரம் ராசிக்கு சென்ற குரு பகவான் படிப்படியாக வக்ரமடைந்து பின்னோக்கி நகர்ந்து 08.07.2020  முதல் மீண்டும் தனுசு ராசிக்கு வந்திருக்கிறார். செப்டம்பர் 13ஆம் தேதி வரை வக்ரநிலையில் சஞ்சரித்து மீண்டும் நேர்கதிக்கு மாறும்.

குருபகவான் நவம்பர் 20ஆம் தேதி வரை தனுசு ராசியில் பயணித்து மீண்டும் மகரம் ராசிக்கு செல்கிறார். கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த கால கட்டத்தில் நிறைய பேருக்கு வேலையிழப்பு, வருமானம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குருவின் இந்த பயணத்தினால் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் ஏற்படும் என்று பார்க்கலாம்.

மேஷம் :

குரு உங்கள் வீட்டின் ஒன்பதாவது மற்றும் பன்னிரண்டாவது வீட்டின் ஆட்சியாளர்.  2020 ஆம் ஆண்டில் குரு ஒன்பதாவது வீட்டில் தங்குவார்.

ராசிக்காரர்களுக்கு புது தெம்பும் உற்சாகமும் பிறக்கும். புது வேலை கிடைக்கும். உயர்கல்வி படிப்பதில் இருந்த தடைகள் நீங்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் நிலவரம் அறிந்து முதலீடு செய்யுங்க. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம் :         

குருஉங்களுக்கு எட்டாவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதி. இது இந்த ஆண்டு எட்டாவது வீட்டில் பெயர்ச்சி.

அஷ்டமத்து குரு என்றாலும் கவலை வேண்டாம் மன அமைதி உண்டாகும். திருமணம் உள்ளிட்ட தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் தீரும்.சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்க. நினைத்தது நிறைவேற அதிகாலையில் எழுந்து ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமச்சிவாய நாமம் படிங்க பிரச்சினைகள் தீரும்.

மிதுனம்

குருஉங்கள் ஏழாவது மற்றும் பத்தாவது வீடுகளை வைத்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டில், குருஉங்கள் அடையாளத்திலிருந்து ஏழாவது வீட்டில் இடம் பெறுவார்

குரு உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் வக்ரநிலையில் சஞ்சரிக்கிறார். உங்களின் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் தடைகள் ஏற்படும். ஏழாம் வீட்டில் இருந்து குரு உங்கள் ராசியை பார்த்தாலும் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும்.சிலருக்கு திடீர் பணவரவு வரும் என்றாலும் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெளியூர் பயணங்களை ஒத்திப்போடுங்கள். விஷ்ணு சகஸ்ராநாமம் படிங்க மனக்கவலைகள் நீங்கும்.

கடகம் :

உங்கள் ஜாதகத்தில் ஆறாவது மற்றும் ஒன்பதாவது வீட்டில் குரு ஆட்சி செய்கிறது இது 2020 ஆம் ஆண்டில் உங்கள் ஆறாவது வீட்டில் இருக்கும்.

தடைபட்டு வந்த காரியங்கள் மளமளவென நிறைவடையும், சுப காரிய பேச்சுவார்த்தைகள் தடைகள் இன்றி நிறைவேறும். எதிலும் எச்சரிக்கை தேவை. பேச்சில் கவனமாக இருங்க. அவசரப்பட்டு பேசிவிட்டு அப்புறம் அவதிப்படாதீங்க. சிலருக்கு வீண் அலைச்சல்கள் வரலாம் கவனமாக இருங்க. உணவு விசயத்தில் கவனமாக இருங்க இல்லாவிட்டால் ஆரோக்கிய குறைபாடு வரும். சிவபெருமானை நினைத்து ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமச்சிவாய என உச்சரியுங்கள். நன்மைகள் நடைபெறும்

சிம்மம்: 

குரு உங்கள் ராசியில் 5வது மற்றும் 8வது வீட்டில்ஆவார். இது இந்த ஆண்டு  5 வது வீட்டில் இருக்கும்.

உங்களின் அழகு ஆரோக்கியமும் கூடும். உங்களுக்கு பண வருமானம் வரும் பழைய கடன்களை அடைப்பீர்கள். உங்க செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். சொந்தபந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். தடைபட்டு தள்ளிப்போன சுப காரியங்களை நடத்துவீர்கள். விஐபிக்களுடன் நட்பு கிடைக்கும்.வருமானம் அதிகரிக்கும். மஞ்சள் நிற உடை அணிவதும் வியாழக்கிழமை தானம் செய்வதும் சிறப்பு. கொண்டைக்கடலை சமைத்து ஏழைகளுக்கு தானம் கொடுங்க.

கன்னி :

குரு உங்கள் ராசி 4வது மற்றும் 7வது வீட்டின் ஆவார். இது இந்த ஆண்டு நான்காவது வீட்டில் இருக்கும்.

தடைபட்டிருந்த திருமணம் கைகூடி வரும். வீட்டிற்குள் திடீர் பயணங்களினால் உற்சாகமடைவீர்கள். எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசாதீர்கள் வளைந்து கொடுத்து போங்க. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம் விட்டுக்கொடுத்து போங்க உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. வியாழக்கிழமை குருபகவானை நினைத்து விளக்கேற்றி வழிபடுங்கள்.


மீதி  6  ராசி  நாளை  தொடரும் 

மோகனா  செல்வராஜ்