ALL ஆன்மீகம் VIDEO NEWS
குப்பை அள்ளும் வண்டிகளில் மதிய உணவு விசாரணை
July 31, 2020 • Dharmalingam

 

திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட14 வார்டுகளில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கான மதிய உணவு தினமும் குப்பை அள்ளும் வண்டிகளில் எடுத்துச் சென்றுள்ளனர். மாநகராட்சி இதுபோல் சுகாதாரம் இல்லாமல் உணவு வினியோகிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக  நாளிதழில் செய்தி வெளிவந்தது. இதன்அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக வழக்குபதிந்து விசாரித்தார்.

மேலும் இதுகுறித்து உரிய விசாரணை செய்து மாநகராட்சி ஆணையர் 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.