ALL VIDEO NEWS ஆன்மீகம்
குக்கரில் சமைப்பதால் இதய நோய் வருமா
August 4, 2020 • Dharmalingam

குக்கரில் சமைத்து சாப்பிட்டு வந்தால் இதய நோய் வர வாய்ப்புள்ளதாக ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

உணவுமுறைகள் பற்றியும், ஆரோக்கிய உணவுகள் பற்றியும் அனைவரும் விவாதிக்கிறோம் அவற்றை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம்.
 
ஆனால் உணவை சமைக்கும் முறையை பற்றி நாம் இதுவரை யோசித்து பார்த்ததே இல்லை.
 
 
ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதனை தவறான முறையில் சமைத்தால் விஷமாக மாறிவிடும். உலகம் முழுவதும் இப்பொழுது பரவலாக பயன்படுத்த படும் சமைக்கும் முறை யாதெனில் குக்கரில் சமைப்பதுதான்.

நம் முன்னோர்கள் விறகடுப்பை வைத்து அதில் பாத்திரத்தை வைத்து சமைத்தார்கள்.

ஆனால் அவர்கள் அனைவரும் ஆரோக்கிய வாழ்வே வாழ்ந்தனர். நம்மை போல மருத்துவமனைக்கு அடிக்கடி செல்லவில்லை.

இப்பொழுது நம் மனதில் எழும் ஒரு கேள்வி குக்கரில் சமைப்பது ஆரோக்யமானதுதானா என்பதுதான்.

அதற்கான விடையைத்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

இப்பொழுதெல்லாம் பெரும்பாலான வீடுகளில், குக்கரில் தான் அரிசி, சாம்பார், குழம்பு ஆகியவைகளை சமைத்து சாப்பிடுகிறோம்.

இது ஒரு எளிமையான முறை என்பதால், குக்கரில் சமைப்பதையே விரும்புகின்றனர்.

இந்நிலையில் குக்கரில் சமைப்பது ஆரோக்கியம் இல்லை எனவும், இதனால் இதய நோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

அழுத்த சமையற்கலனில் சமைக்கும்போது நீராவியானது அதிக அழுத்தத்தில் குக்கருக்குள் அடைக்கப்படுகிறது, இந்த நீராவி அழுத்தம்தான் உணவை வேகச்செய்கிறது. உணவுடன் சேர்க்கப்படும் நீரானது வெப்பத்தால் கொதிக்க வைக்கப்பட்டு அந்த அழுத்தம் உணவு வேகும் வேகத்தை அதிகரிக்கிறது.
 
இந்த முறையில் வெப்பமானது குக்கரிலிருந்து உணவிற்கு நீராவி மூலம் மாற்றப்படுகிறது.
 
குக்கரில் சமைப்பது ஆரோக்கியமானதா? இதற்கான தெளிவான பதில் இன்னும் கண்டறிய படவில்லை என்பதே உண்மை.
 
குக்கரில் சமைப்பது ஆரோக்கியமானதா? இல்லையா? என்பது இன்றும் விவாதத்திற்குரிய ஒரு பொருளாகவே இருக்கிறது.
 
சிலர் இதனை ஆரோக்கியமற்றது என்கிறார்கள் ஏனெனில் இது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை அதிக சூடேற்றுவதால் அவை நீராவியுடன் சென்றுவிடுகிறது. சிலருக்கு இது ஆரோக்கியமானதாகவே இருக்கிறது, ஏனெனில் இது உணவை விரைவில் சூடுபடுத்தி விடுவதால் உணவில் உள்ள சத்துக்கள் அதிலேயே இருக்கிறது.

கொதிக்க வைப்பதுடன் ஒப்பிடும்போது ஸ்டீமிங் முறையில் சமைப்பது ஆரோக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.
 
மருத்துவர்களின் கூற்றுப்படி இவை காய்கறிகளில் உள்ள சத்துக்களை அவற்றிலேயே தக்க வைக்கிறது. மற்ற முறைகளில் சமைக்கும்போது அதிலுள்ள சத்துக்கள் எளிதில் வெளியேறிவிடுகிறது.

ஒவ்வொரு உணவிற்கும் குக்கர் ஒவ்வொரு மாதிரி செயல்படுகிறது. அரிசியை வேகவைக்கும் போது இது நன்கு வேகவைக்கிறது, கொதிக்க வைப்பதோடு நீராவியில் வேகவைப்பது நன்கு வேகவைக்கப்படும்.
 
அதாவது இதய நோய் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதனை தடுக்க முதலில் குக்கரில் சமைத்து சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்
 
அதுவே தக்காளியை வேகவைக்கும் போது இது ஆரோக்கியமானதாக வேகவைக்கிறது.
 
இறைச்சியை வேகவைக்கும் போது இது நன்கு வேகவைத்து எளிதில் செரிக்கும்படி செய்கிறது, மற்ற முறைகளை விட இது இறைச்சியை நன்கு வேகவைக்கிறது.

கெட்ட செய்தி என்னவெனில் மாவு பொருள்களை வேகவைக்கும் போது அக்ரிலாமைடு என்னும் வேதிப்பொருளை உருவாக்குகிறது, இது மிகவும் ஆபத்தான பொருளாகும்.
 
இதனை தொடர்ந்து சாப்பிடும்போது புற்றுநோய், மலட்டுத்தன்மை மற்றும் நரம்பு மண்டல கோளாறுகள் போன்ற பல பிரச்சினைகளை உருவாக்கும்.
மற்ற சமைக்கும் முறைகளை போலவே குக்கரில் சமைப்பதிலும் சில நிறைகளும், குறைகளும் உள்ளது.
 
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் குக்கரில் சமைப்பது உங்கள் உணவில் உள்ள லெக்டினை அழிக்கிறது. லெக்டின் என்பது மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனம் ஆகும், இது உணவுகளின் ஊட்டச்சத்து மதிப்புகளை குறைப்பதன் மூலம் தாதுக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது

எப்பொழுதும் புதுப்புது சமைக்கும் முறைகளையும், உணவுகளையும் முயற்சித்து கொண்டே இருங்கள். எனவே உங்கள் உடம்பு அனைத்து மாற்றங்களுக்கும் தயாராய் இருக்கும். பல்வேறு சமையல் முறைகளுக்கு இடையில் ஒரு சமநிலையை நீங்கள் எப்பொழுதும் தக்க வைக்க வேண்டும்.

மேலும் குக்கரில் சமைப்பதால் அந்த உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் நமக்கு கிடைக்காமல் போவதால், நமது ஆரோக்கியமும் கேள்விக்குறியாகிறது எனவும் பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தீர்ப்பு

குக்கர் வருவதற்கு முன்பு சாதத்தை எப்படி வடித்து சாப்பிடுவோமோ அதே போல் தான் சாதத்தை  வடித்து  சாப்பிட வேண்டும் எனவும் மருத்துவர்  கூறுகிறார்.
 

மற்றும் ஒரு  குறிப்புடன்

வணக்கம் அன்புடன் கார்த்திகா