ALL VIDEO NEWS ஆன்மீகம்
கீதையின் உபதேசங்களை பின்பற்றி வாழ்ந்திடுவோம் : இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வாழ்த்து
August 11, 2020 • Dharmalingam

 

சென்னை : மக்கள் அனைவரும் கீதையின் உபதேசங்களை பின்பற்றி வாழ்ந்திடுவோம் என்று அ.தி.மு.க. ஒருங்கிணப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

உலகில் தீமைகள் ஒழிந்து அறம் தழைத்தோங்கிட பகவான் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.