ALL VIDEO ஆன்மீகம் NEWS
கிருஷ்ணாபுரம் நீர்தேக்க அணை உபரிநீர் வெளியேற்றம்
August 2, 2020 • Dharmalingam

 

திருவள்ளூர்: பள்ளிப்பட்டு தாலுகாவில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் நீர்தேக்க அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை அடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் வார்டில் மகேஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன் மகேஷூக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.