ALL ஆன்மீகம் NEWS VIDEO
கிராமத்து மீன் குழம்பு
August 24, 2020 • Dharmalingam
 
வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. அதிலும் அந்த மீனை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக, நம் கிராமத்து ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
 
மேலும் கிராமத்து மீன் குழம்பின் சுவையே தனி தான். இங்கு கிராம பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
 
முக்கியமாக இந்த குழம்பில் உங்களுக்கு பிடித்த எந்த மீனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். சரி, இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போம்
 
தேவையான பொருட்கள்:

மீன் - 1/2 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்)

நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

வெந்தயம் / சோம்பு- 1 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிது

புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு

உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு

தேங்காய் - 1 கப் (துருவியது)

சின்ன வெங்காயம் - 10

வறுத்து அரைப்பதற்கு.

வரமிளகாய் - 8-10

மல்லி - 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக பேஸ்ட் செய்து கொள்ளவும்.
 
பின் அதில் தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்பு ஒரு பாத்திரத்தில் அந்த பேஸ்ட் மற்றும் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். 

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு ஏறிய பின்பு, வெந்தயம், சோம்பு போடவும். பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.

நன்கு வதக்கிய பின்பு தக்காளி சேர்க்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத்தூள் போட்டு கிளறவும்.

பின்பு புளி கரைசலை ஊற்றவும். தேவையான உப்பைப் போட்டு கொதித்த பின்பு தேங்காய்ப் பாலை அதில் ஊற்றவும்.

குழம்பில் இருந்து எண்ணெய் தனியே பிரியும் போது, அதில்பின்பு நன்றாக கழுவி வைத்த  மீனை அதில் போடவும். 
 
மீன் நன்கு வெந்து எண்ணெய் பிரியும் போது இறக்கினால், சுவையான கிராமத்து மீன் குழம்பு ரெடி

இரண்டு கொதியில் அதை இறக்கி வைக்கவும். கொத்தமல்லியை தூவவும்.
 
நாளை உங்களது வீட்டில் மீன் குழம்பு  செய்து அனைவரையும் அசத்திடுங்கள்

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.

வணக்கம் அன்புடன் கார்த்திகா