ALL ஆன்மீகம் NEWS VIDEO
கிச்சன் டிப்ஸ்.
May 25, 2020 • Dharmalingam

கிச்சன் டிப்ஸ்.:

தோசை சுடும் முன்பு தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெயும், உப்பும் கலந்து தேய்த்தால் தோசை சுட அதிக எண்ணெய் தேவைப்படாது.

சாம்பார் அதிக நேரம் கெட்டுப் போகாமலிருக்க பருப்பு வேக வைக்கும்போது அதனுடன் 2 கிராம்பு சேர்க்கவும். சாம்பார் கூடுதல் மணத்துடன் இருக்கும்.

தோசை மாவில் தேங்காய்ப்பால் கலந்து தோசை வார்த்தால், தோசை வாசமாகவும், அதிக சுவையுடனும் இருக்கும்.

அரிசி உப்புமா செய்யும்போது தேங்காய் இல்லையா, அல்லது குறைவாக உள்ளதா, கவலை வேண்டாம். தாளிக்கும் எண்ணெயுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டால் தேங்காய் சேர்த்த அதே வாசனையுடன் ருசியிலும் குறைவிருக்காது.

நெடி அடிக்காமல் மிளகாய் வற்றலை வறுக்க, வத்தலின் காம்பை ஒடித்துவிட்டு பின் வறுத்தால் நெடி அடிக்காது.

இட்லிக்கு ஆட்டிய மாவில் 4 வெற்றிலைகளின் காம்பை நீக்கி விட்டுப் போட்டால் பொங்கி வழியாது.

மோகனா செல்வராஜ்