ALL VIDEO ஆன்மீகம் NEWS
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி.
August 11, 2020 • Dharmalingam

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி. வசந்தகுமார், அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இருவரும் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,914 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இது குறித்து சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் நேற்று 5914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 5,879 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 35 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 130 ஆய்வகங்கள் (அரசு-61 மற்றும் தனியார்-69) மூலமாக, நேற்று மட்டும் 67,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 32 லட்சத்து 92 ஆயிரத்து 958 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.