ALL NEWS ஆன்மீகம் VIDEO
கலோரி குறைவாகவுள்ள பீன்ஸ் பொரியல்
July 29, 2020 • Dharmalingam
பீன்ஸ் பொரியல்:
 
பீன்ஸ் பொரியல், கலோரி குறைவாகவும், புரோட்டீன் அதிகமாகவும் உள்ள ஒரு ஆரோக்கியமான டிஷ் அதுமட்டுமல்லாமல், பீன்ஸ் பொரியலானது மிகவும் சுவையானதும் கூட. மேலும் இது செய்வது மிகவும் எளிது.
 
அதிலும் மதிய வேளையில் சாம்பார் மற்றும் பீன்ஸ் பொரியலை செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான்.
 
 
இப்போது பீன்ஸ் பொரியலின் எளிமையான செய்முறையை கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பார்த்து, உங்களின் அனுபவத்தை சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - 250 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
துருவிய தேங்காய் - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1
சிட்டிகை உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 1/2 கப்
 
செய்முறை: முதலில் பீன்ஸை கழுவி, அதன் இருமுனைகளையும் அகற்றி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு சிறு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய பீன்ஸை போட்டு, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
பின்பு அதில் உள்ள அதிகப்படியான நீரை வடித்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து, 1 நிமிடம் தாளிக்க வேண்டும்.
 
பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும். அடுத்து பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒன்றிரண்டாக வேக வைத்துள்ள பீன்ஸ் சேர்த்து, வடித்து வைத்துள்ள தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும்.
 
தண்ணீர் முழுவதும் வற்றியதும், துருவிய தேங்காய் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி, இறக்கி விடவும்.
 
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின்  சமையல்  பயணம் தொடரும்.
 
இப்போது சுவையான பீன்ஸ் பொரியல் ரெடி

மற்றும் ஒரு சமையல் குறிப்புடன்

வணக்கம் அன்புடன் கார்த்திகா