ALL ஆன்மீகம் VIDEO NEWS
கருணைக்கிழங்கு வறுவல்
July 9, 2020 • Dharmalingam

 

கருணைக்கிழங்கு வறுவல் - இதோ ரெசிபி

சாம்பார் , ரசம்  குழம்பு போன்ற  வகைகளுக்கு கருணைக்கிழங்கு வறுவல் சுவையாக இருக்கும்.

அதை இந்த  சுவையில் செய்து சாப்பிட்டுப்பாருங்கள்.

தேவையான பொருட்கள் :

கருணைக்கிழங்கு - 1/4 கிலோ

வெங்காயம் - 1

தக்காளி - 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 tsp    தேங்காய் - 1 துண்டு     

சோம்பு - 1 tsp     மிளகு - 1/2 tsp   சீரகம் - 1/4 tsp   

பட்டை   2    கிராம்பு - 3    எண்ணெய் - தே.அ

உப்பு - தே.அ

செய்முறை :

முதலில் தேங்காய், சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, சீரகம் ஆகிவற்றை மிக்ஸியில் மைய அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

கருணைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி கடாயில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வையுங்கள்.

வெந்ததும் தனியாக தட்டில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக கொஞ்சம் போல் கடாயில் எண்ணெய் விட்டு கருணைக்கிழங்கை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள்.

மீண்டும் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு சேர்த்து தாளித்ததும் வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்குங்கள்.

பின் தக்காளி சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் கருணைக்கிழங்கு சேர்த்து அதோடு மிளகாய் தூள் சேர்த்து வதக்குங்கள்.

2 நிமிடங்கள் வதக்கியதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து வதக்குங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். ஏற்கெனவே வேக வைக்க கொஞ்சம் உப்பு சேர்த்தது நினைவிருக்கட்டும்.

தற்போது நன்கு வதங்கி சற்று மொறுமொறுவென மாறியதும் அடுப்பை அனைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் சுவையான கருணைக்கிழங்கு வறுவல் தயார்.

மோகனா  செல்வராஜ்