ALL ஆன்மீகம் NEWS VIDEO
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தேதி அறிவிப்பு
August 3, 2020 • Dharmalingam

கொரோனோ பரவல் காரணமாக மார்ச் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனோ பரவல் வீரியம் எடுக்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன.

நான்கு மாதங்களுக்கு பிறகு கொரோனோவை கட்டுக்குள் கொண்டுவந்த இங்கிலாந்து போட்டியை நடத்தி வெற்றியும் கண்டுள்ளது. இதன் எதிரொலியாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த பிசிசிஐ தீவிரம் காட்டியது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்த ஐபிஎல்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. செப். 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் நவ. 10-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை ஐபிஎல் நிர்வாகக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எனத் தகவல்

ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெறப்போகிறது என்ற செய்தி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும், அதனை நேரில் காணமுடியாது என்ற செய்தி வருத்தமளிப்பதாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.