ALL VIDEO ஆன்மீகம் NEWS
ஏ. எல். ராகவன் -மறைந்தார்
June 19, 2020 • Dharmalingam

 

 

பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரான திரு.ஏ. எல். ராகவன் (87) மறைந்தார்.

திரு .ஏ. எல். ராகவன் (A. L. Ragavan; 1933 - சூன் 19, 2020) தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர்.

1950 களில் இருந்து 1970கள் வரை தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

ஏ. எல். இராகவன் எங்கிருந்தாலும் வாழ்க, சீட்டுக்கட்டு ராஜா, என்ன வேகம் நில்லு பாமா, அங்கமுத்து தங்கமுத்து உள்ளிட்ட பல பாடல்களால் நன்கு அறியப்பட்டவர். ராகவன் சௌராட்டிர சமூகத்தைச் சேர்ந்தவர்.

இவரது  மனைவி எம். என். ராஜம் தென்னிந்திய திரைப்படங்களில் 1950கள் மற்றும் 1960 களில் முன்னணி வேடங்களில் நடித்த பிரபல நடிகை ஆவார்.

அவருடைய மறைவுக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட சினிமாத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.