ALL VIDEO ஆன்மீகம் NEWS
எந்த மொழியாக இருந்தாலும் மொழித் திணிப்பை திமுக எதிர்க்கும் - கனிமொழி 
July 30, 2020 • Dharmalingam

 

மக்களவையில் எப்போதும் திமுக மக்களுக்காக தனது குரலை பதிவு செய்யும் என்று கனிமொழி கூறியுள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் ஆங்கிலத்திற்கு அடுத்து இந்தியை கட்டாயப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி எந்த நிலையிலும் எந்த மொழியாக இருந்தாலும் மொழித்திணிப்பை திமுக எதிர்க்கும் என்றார். மேலும் மக்களவையில் எப்போதும் திமுக மக்களுக்காக தனது குரலை பதிவு செய்யும் என்றார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்று உள்ளார். நாட்டின் ஜி.டி.பி. மதிப்பில் 6% பதிய கல்விக் கொள்கைக்கு ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையையும் மேம்படுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். 

_______________________________

சிறந்த பள்ளி கட்டமைப்பு பாலகிருஷ்ணன், கல்வியாளர் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில ஆலோசகர்: பிளஸ் 2 வரை கட்டாய கல்வி முறை கொண்டு வரப்பட்டுள்ளதால், குறைந்தபட்ச கல்விக்கான நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.மேலும், பள்ளிகளில் தொழிற்கல்வி அறிமுகப்படுத்தும் போது, முழுமையாக செயல்படுத்தும் வகையில், செயல்முறைகள் உருவாக்க வேண்டும். 

தாய்மொழி கல்வி,கட்டாயமாக்கப்பட்டுள்ளதை, 10ம் வகுப்பு வரை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில், பிராந்திய மொழிகளுக்கான முக்கியத்துவம் குறைய வாய்ப்புள்ளது.