ALL ஆன்மீகம் NEWS VIDEO
எட்டு வடிவ நடைப்பயிற்சி செய்தால் நன்மைகள்
August 6, 2020 • Dharmalingam

எட்டு வடிவ நடைப்பயிற்சி நன்மைகள்

எட்டு வடிவ  நடைப்பயிற்சி செய்வது எப்படி, நடைப்பயிற்சி பயன்கள், நடைப்பயிற்சி இயந்திரம், எட்டு நடைப்பயிற்சி, 8 நடைப்பயிற்சி, வீட்டிலேயே நடைப்பயிற்சி மிகவும் நல்லது.

நடைப்பயிற்சி மேற்கொள்வது நம் உடலுக்கு எந்த அளவிற்கு நல்லது என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் எந்த மாதிரியான நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி பலருக்கும் தெரியவில்லை.

சாதாரணமாக நடைப்பயிற்சி மேற்கொள்வதை விட எட்டு வடிவத்தில் நடந்தால் உடலுக்கு ஆரோக்கியமும் சக்தியும் கிடைக்கும். “எட்டு போடுபவனுக்கு நோய் எட்டி போகும்” என்பது பழமொழி.

இந்த எட்டு நடைப்பயிற்சி சித்தர்கள் காட்டிய ஒரு வழி. எட்டு வடிவ நடைப்பயிற்சியை எங்கு செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், யாரெல்லாம் இதை செய்ய கூடாது என்பது குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

இந்த எட்டு வடிவ நடைப்பயிற்சியை மண் தரை, சிமெண்ட் தரை, தார் ரோடு என்று எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். மண் தரையாக இருந்தால் மிகவும் நல்லது.

டூவீலர் லைசென்ஸ் எடுக்க போடப்படும் எட்டு அளவிற்கு வரைந்து கொள்ளலாம். அதற்கு இடம் இல்லாதவர்கள் அவரவர் இடங்களுக்கு ஏற்ப 8 யை வரைந்து கொள்ளவும்.

இந்த எட்டின் மேல் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ஒரு பதினைந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்க வேண்டும். அதன் பிறகு  வடக்கில் இருந்து தெற்கு நோக்கி மாறி நடக்க வேண்டும்.

இந்த நடைப்பயிற்சி செய்யும் போது செருப்பு அணிய கூடாது. அப்போது தான் பூமியில் இருக்கும் புவி ஈர்ப்பு சக்தி மூலமாக நம் உடலில் உள்ள கெட்ட சக்தியெல்லாம் வெளியேறும். இந்த நடைப்பயிற்சியை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதோடவே மூச்சு பயிற்சியும் செய்தால் சிறந்தது. பிறருடன் பேசிக் கொண்டே நடத்தல் பலன் அளிக்காது.

கைகளை வீசி காலையும் மாலையும் உணவிற்கு முன் வெறும் வயிற்றில் முப்பது நிமிடங்கள் நடக்க வேண்டும். இதனால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

◆மார்பு சளியால் அவதிப்படுபவர்கள் இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது மூச்சு காற்று மூலமாக பிரான வாயு உள்ளே போவதினால் விரைவில் குணமடைவர்.

◆சளி, இருமல், சைனஸ் பிரச்சனைகளும் படிப்படியாக குறையும்.

◆குளிர்ச்சியால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் இதெல்லாம் குணமாகும்.

◆இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

◆மூக்கடைப்பு நீங்கி சுலபமாக சுவாசிக்க உதவி செய்யும்.

◆இடுப்பு, கால் பகுதிகள் எல்லாம் நன்றாக வலைந்து கொடுக்கும்.

◆உள் உறுப்பு, வெளி உறுப்பு ஆகிய அனைத்தும் நன்றாக செயல்படும்.

◆செரிமான கோளாறு, தோல்பட்டை வலி, மூட்டு வலி, கழுத்து வலி, மூல நோய், கண் பார்வை குறைபாடு, உடல் பருமன் கொண்டவர்களுக்கு இந்த நடைப்பயிற்சி மிகவும் நல்லது.

◆குதிகால் வலி, வெடிப்பு உள்ளவர்கள் இதனை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

◆மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றிற்கு சிறந்த தீர்வாக அமைகிறது. 

◆இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

கர்ப்பிணிகள் மற்றும் புற்றுநோய் உடையவர்கள் இந்த நடைப்பயிற்சியை செய்ய கூடாது.

 

தொகுப்பு மோகனா  செல்வராஜ்