ALL ஆன்மீகம் NEWS VIDEO
ஊரடங்கை மிகக் கடுமையாக அமல்படுத்த-தலைமைச் செயலாளர்
June 18, 2020 • Dharmalingam

மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய தலைமைச் செயலாளர், மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் மக்கள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கண்காணிப்பதுடன் அந்தப்  பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

விரைவாகவும், அதிக அளவிலும் சோதனைகள் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என கூறியுள்ள தலைமை செயலாளர் சண்முகம், கட்டுப்பாட்டு பகுதிகளில் தேவையற்ற நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கை மிகக் கடுமையாக அமல்படுத்துவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், இந்த தருணத்தில் மக்களிடையே நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.  

சென்னை மாநகர காவல் எல்லைப் பகுதியில் நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கை மிகக் கடுமையாக அமல்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.