ALL VIDEO NEWS ஆன்மீகம்
ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் ஆடு திருடிய நபர் கைது
August 3, 2020 • Dharmalingam

சென்னையில் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் கர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் சமீப காலமாக கொள்ளைகள் அதிகளவு நடைபெற்று வருகின்றன.

ஊரடங்கு காரணமாக வேலை இழந்த இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் ஆடு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது சென்னை தண்டையார்பேட்டையில் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார்.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு ஆந்திரா மற்றும் மெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.