ALL VIDEO NEWS ஆன்மீகம்
ஊரடங்கில் சில தளர்வு இ-பாஸ் தேவையில்லை மத்திய அரசு
July 30, 2020 • Dharmalingam

ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் கொரோனா பொதுமுடக்கத்தின் 3ஆம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரும் என்றும் கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம். 

நாடு முழுவதும் இரவில் தனிமனித நாடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முற்றிலுமாக திரும்பப் பெறப்பட்டது

* பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை
* உள்நாட்டில் குறைந்த அளவில் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி
* சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு; வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் பணி தொடரும்
* மெட்ரோ ரயில்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்களுக்கு செயல்பட விதித்த தடை நீட்டிப்பு
* திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவைகளுக்கும் தடை நீட்டிப்பு
* பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், அரங்குகள் செயல்பட விதித்த தடை தொடர்கிறது.

மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் தனி நபர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தடை இல்லை- இ-பாஸ் தேவையில்லை