ALL ஆன்மீகம் NEWS VIDEO
உலக சுற்றுச்சூழல் நாள் 05/06/2020
June 5, 2020 • Dharmalingam

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) 

ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் சூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.

சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.

2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக 'பல்லுயிர்ப் பெருக்கத்தை' ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, "பல்லுயிர்ப் பெருக்கம் என்பது அவசரமானது மட்டுமின்றி நமது இருத்தலியலுக்கான நெருக்கடியும் கூட. சமீப காலமாக, பிரேசில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை புரட்டிப்போட்ட காட்டுத்தீ, ஆப்பிரிக்காவை அச்சுறுத்திய வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் தற்போது உலகையே உலுக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் என நாம் பல்வேறு அபாயங்களை சந்தித்து வருகிறோம். இவையனைத்தும் மனிதர்கள் மற்றும் வாழ்வின் வலைகள் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதை நிரூபிக்கிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில், சுற்றுச்சூழல் மற்றும் அதுசார்ந்த தலைப்புகளில் பிபிசி தமிழ் இதுவரை பதிப்பித்த சில முக்கிய கட்டுரைகளை உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
பருவநிலை மாற்றம் என்றால் என்ன?

புவி வெப்பமயமாதல் உலகில் பேரழிவை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மனிதர்களின் செயல்பாடுகளின் காரணமாக கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அதீத வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட மோசமான மாற்றங்கள் நிலவி வருகின்றன.

''ஒவ்வொரு வருடமும் நாம் பிரச்சனைகளை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறோம்,'' என்று பிரபல இயற்கை ஆர்வலரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான அட்டன்பரோ கூறியுள்ளார்.எதிர்காலத்தில் மிக அபாயகரமான அளவுக்கு வெப்பநிலை உயர்வதைத் தவிர்ப்பதற்கு என்ன மாதிரியான, சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது பற்றி 2018ல் ஐ.நா. பருவநிலை மாற்ற அறிவியல் குழு பட்டியலிட்டது.

"இப்போது செயலாற்றுங்கள். அல்லது மோசமான பிரச்சனையை எதிர்க்கொள்ளுங்கள்.!"

பிளாஸ்டிக் பைகள் பயன் படுத்த மாட்டோம் எ‌ன்று சூளுரை ஏற்போம் சுற்று சூழலை காப்போம்

தொகுப்பு   -  மோகனா செல்வராஜ்