ALL ஆன்மீகம் NEWS VIDEO
உலக இசை தினம் - கே. வி. மகாதேவன்
June 21, 2020 • Dharmalingam

 

கே. வி. மகாதேவன் (மார்ச் 14, 1918 - சூன் 21, 2001), ஒரு தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார்.

1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 இல் முருகனே என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.

தமிழ்நாட்டின் தென்பகுதியில் நாகர்கோவில் என்ற ஊரில் கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் பிறந்தார். இவரது பாட்டனார் ராம பாகவதர் திருவனந்தபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலோயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார்.

பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார்

சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1967, கந்தன் கருணை) (இவ்விருதின் முதல் பெறுநர்)
சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு விருது                                   (1969, அடிமைப் பெண்)
சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1980, சங்கராபரணம்)
சிறந்த இசையமைப்பாளருக்கான பில்ம்பேர் விருது (தெலுங்கு)                          (1992, சுவாதி கிரணம்)                                                                                                  கலைமாமணி விருது

மன்னவன் வந்தனாடி தோழி

ஆயிரம் நிலவே வா

அறுபடை வீடு கொண்ட திருமுருகா

இசை என்பது வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வு பூர்வமானது இசை. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுப்போக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது.

 வரும் தலைமுறையினருக்கு இசையில் ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாராட்டும் விதத்திலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.

2001ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி (உலக இசை தினம் ) தென்னிந்திய இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் மறைந்தார்

தொகுப்பு -   மோகனா செல்வராஜ்