ALL ஆன்மீகம் NEWS VIDEO
உலகிற்கு முதல் கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்த உள்ளது.
August 8, 2020 • Dharmalingam

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கு தடுப்பு மருந்து கண்டறியும் வேலைகள் பல்வேறு நாடுகளில் பல கட்டங்களாக விரிவடைந்து வருகிறது.

இதில் யார் முதலில் உலகிற்கு கொரோனா தடுப்பூசியை களமிறக்க உள்ளார்கள் என உலகமே எதிர்நோக்கி வருகிறது.

இந்நிலையில் ரஷ்யா நாட்டை சேர்ந்த காமலேயா நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டறிந்து அதனை உலகிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

இந்த தடுப்பு மருந்தை மனித சோதனைக்காக உட்படுத்தி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் முரஸ்கோ கூறுகையில், ஆகஸ்ட் 12ஆம் தேதி உலகிற்கு முதல் கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்த உள்ளது.

அக்டோபர் மாதம் இதன் உற்பத்தி தொடங்கும். தடுப்பூசி தயாரிப்பதற்கான செலவு நாட்டு பட்ஜெட்டில் சேர்க்கப்படும்.

தடுப்பு மருந்து பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்' என அவர் தெரிவித்தார்.