ALL ஆன்மீகம் NEWS VIDEO
உலகச் செய்திகள்
August 12, 2020 • Dharmalingam

உலகின் சிறந்த 100 நிறுவனங்களின் பட்டியல்:

பார்ச்சூன் (fortune)  இதழ் வெளியிட்ட உலகளவிலான சிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலில், இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 96வது இடத்தை பிடித்துள்ளது.

-------------------------

இந்தியா-நேபாளம்... ஆகஸ்ட் 17ஆம் தேதி:

இந்தியா-நேபாளம் இடையே வளர்ச்சி திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. 

-------------------------

பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கான குழு ஒப்புதல்:

இஸ்ரேலின் ஹெரான் ட்ரோன் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை கொள்முதல் செய்ய, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது.

------------------------

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டங்கள் போர்ச்சுக்கலில் இன்று தொடங்குகிறது.

-----------------------

இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை நவம்பர் மாதத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தள்ளி வைத்துள்ளது.