ALL VIDEO ஆன்மீகம் NEWS
உத்தரபிரதேச மாநில பாஜ பெண் அமைச்சர் உயிரிழந்தார்.
August 3, 2020 • Dharmalingam

62 வயதான இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்த பின்னர் ஜூலை 18-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதித்த உத்தரபிரதேச மாநில பாஜ பெண் அமைச்சர் கமல் ராணி வருண்  சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்நிலையில் கமல் ராணி  காலை 9:30 மணிக்கு சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலமானார் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 18ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் ஏற்கனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார்.

இந்நிலையில், உயர் ரத்த அழுத்தம், பல உறுப்புகள் செயலிழந்ததால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9.30 மணியளவில் உயிரிழந்தார்.

மாநில அமைச்சர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவமும் நடந்தது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே நாளில் நடந்திருக்கும் இந்த 3 சம்பவங்களும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் தீவிரமடைந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைந்து குணமடைய வேண்டுகிறேன்-- ராகுல் காந்தி ட்வீட்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைந்து பொது சேவையை தொடர இறைவனை வேண்டுகிறேன்-- துணை முதல்வர் ஓபிஎஸ்