ALL VIDEO ஆன்மீகம் NEWS
உணவுப்பொருட்கள் விற்பனை மந்தம்
August 3, 2020 • Dharmalingam

 

கொரோனா முடக்கம், வேலையிழப்பு, மக்களிடம் வாங்கும் சக்தி குறைவால் உணவுப்பொருட்கள் விற்பனை மந்தமாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் வேகம் அதிகரிப்பால் ஊரடங்கு, தொழில்கள் முடக்கத்தால் வேலையிழந்த மக்கள் பணப்புழக்கமின்றி வாங்கும் சக்தியை இழந்துள்ளனர்.

பள்ளி, கல்லூரி கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பணமின்றி திணறி வருகின்றனர்.

ஆந்திரா, கர்நாடகா, பர்மாவில் இருந்து புதுஉளுந்து வரத்து காரணமாக உளுந்தம்பருப்பு மூட்டைக்கு 1,500 வரை குறைந்துள்ளது.

வரத்து அதிகரிப்பால் உளுந்தம்பருப்பு மூட்டைக்கு 1,500 வரை சரிந்துள்ளது. பாமாயில் டின்னுக்கு 20 உயர்ந்துள்ளது.

கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் பெய்யும் மழையால் பாசிப்பயறு புதுவரத்து ஈரப்பதமாக வருவதால், மூட்டைக்கு 10 கிலோ பயறு சேதமாகிறது. சேதம் அதிகமாவதால் பாசிப்பருப்பு விலை குறையவில்லை.