ALL VIDEO NEWS ஆன்மீகம்
உணவகங்கள் செயல்படும் -தமிழக அரசு
June 7, 2020 • Dharmalingam

ஹோட்டல்களில் நாளை முதல் உட்கார்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் ,தமிழகத்தில் உணவகங்கள் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஹோட்டல்களின் வாயிலில் தெர்மல் ஸ்கிரீனிங் கருவி இருக்க வேண்டும் என்றும்,  கை கழுவும் இடத்தில் கிருமி நாசினி, சோப்பு இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஏ.சி. பயன்படுத்தக்கூடாது, கழிவறைகளை ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும், 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஒரு டேபிளுக்கும் மற்றோரு டேபிளுக்கும் ஒரு மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும், பண பரிவர்த்தனையை தவிர்த்து, கூடுமான வரை இணைய வழி பண பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும்,வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், உடல் நிலை சரியில்லாத ஊழியர்களை பணி அமர்த்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

* "தமிழகம் முழுவதும் உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும்"

* நாளை முதல் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தகவல்

* உணவு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை எனவும் விளக்கம்