ALL ஆன்மீகம் NEWS VIDEO
இ-பாஸ் நடைமுறை விவகாரம்: தமிழக தலைமை செயலர் விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு
August 11, 2020 • Dharmalingam

 

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க உள்ளவர்கள் முன்னதாக இ-பாஸ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை திண்டுக்கல் மாவட்ட தலைவர் விஸ்வரத்தினம்,  மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், மத்திய அரசு இ-பாஸ் வழங்குவதில் தளர்வுகள் அளித்துள்ளது. மக்கள் சுதந்திரமாக செயல்படுவதை தடுக்கும் வண்ணமாக, இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மாணவர்கள் அட்மிஷனுக்கு செல்லவும், சொந்த ஊருக்கு செல்லவும் பணி நிமித்தமாக சொந்த ஊரிலிருந்து வேறு இடங்களுக்கு செல்லவும் மக்கள் சிரம படுகின்றனர். இதில் மனித உரிமை மீறல் இல்லையா என தமிழகம் அரசிடம் விளக்கம் கேட்டு, இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்.' என கூறப்பட்டிருந்தது.

மத்திய அரசு இ-பாஸ் தேவையில்லை என கூறிய நிலையில் தமிழகத்தில் இ-பாஸ் இன்னும் கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மத்திய அரசு உத்தரவை மீறி இ-பாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறிய செயலா? என்பது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் நான்கு வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.