ALL VIDEO NEWS ஆன்மீகம்
இளையராஜாக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் - பிரபல இயக்குநர்வேண்டுகோள்
August 8, 2020 • Dharmalingam

இளையராஜா அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று வெங்கட் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜா அவர்கள் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தது மட்டுமில்லாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் செய்துள்ளார்.

5 முறை தேசிய விருதையும், பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இளையராஜா அவர்களுக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்க வேண்டும் என்று பிரபல இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு அவர்கள் நடித்து முடித்துள்ள திரைப்படம் லாக்கப்.

ஆகஸ்ட் 14ம் தேதி ஓடிடியில் வெளியாகும் இந்தப் படத்தினை குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு அவர்கள், தன்னுடைய பெரியப்பாவான இளையராஜாவிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.