ALL ஆன்மீகம் NEWS VIDEO
இறுதியாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம்
July 29, 2020 • Dharmalingam

பொறியியல் படிப்பில் இறுதியாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் இறுதியாண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் இறுதியாண்டு தேர்வை நிச்சயமாக நடத்த வேண்டும்.

ஆன்லைனில் தேர்வு நடத்துவதற்கான நவீன மென்பொருளை தயாரித்து அதன் மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருக்கிறது